EPS | “எடப்பாடி பழனிச்சாமி கை காட்டும் நபர்தான் அடுத்த பிரதமர்”… முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!

EPS: தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்திருக்கிறார்.

18-வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது . 7கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 26 ஆம் தேதி கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற இருக்கிறது . தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன் பேசியிருக்கிறார். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். மேலும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி குறிப்பிட்ட வாக்குகளை பெற்றாலும் அவர்களால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதிகளை கூட வெல்ல முடியாது என தெரிவித்திருக்கிறார். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி(EPS) கை காட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் வைகை செல்வன். இவரது பேட்டி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Read More: Smokey Biscuit | ஸ்மோக்கி பிஸ்கட் சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.!!

Next Post

Mount Tai | 6,600 படிக்கட்டுகள்.!! ஊர்ந்து செல்லும் சுற்றுலா பயணிகள்.!! 80 லட்சம் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ.!!

Sun Apr 21 , 2024
Mount Tai: சீனாவின் தைஷான் பகுதியில் அமைந்துள்ள தாய் மலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மலையின் 6600 படிக்கட்டுகளை ஏற முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திணறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சீனாவின் தைஷான் பகுதியில் தாய் மலை(Mount Tai) அமைந்து இருக்கிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான தாய் மவுண்ட் 1,545 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த […]

You May Like