உடல் நிலை சரி இல்லாமல் ஹாஸ்பிடலில் இருந்தபோதும் அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார்… பொதுமக்களை நேரடியாகவே சந்தித்து உரையாடி, திமுக அரசையும் சரமாரியாக கேள்வி எழுப்பி விமர்சித்துவருகிறார்..
முதல்கட்ட சுற்றுப்பயணத்தை “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் துவங்கி வடமாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களிலும் மக்களை சந்தித்தார். தொடந்து செவ்வாய்க்கிழமை முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில் நேற்று சிவகங்கை வருகை தந்தை எடப்பாடி பழனிச்சாமியை சிவகங்கை மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில் அதிமுகவினா் வரவேற்பளித்தனா்.
தொடர்ந்து அரண்மனைவாசல் பகுதியில் பிரசார வாகனத்திலிருந்து எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது. இதனால்தான், விதிகளைத் தளா்த்தி மேலும் 30 லட்சம் பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனா். வரும் தோ்தலில் எப்படியாவது திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே மக்களை ஏமாற்றுகிற விதத்தில் இவ்வாறு செயல்படுகின்றன. சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயா்த்தி மக்களை பரிதவிக்க வைத்துள்ளது திமுக அரசு.
உடல் நிலை சரி இல்லாமல் ஹாஸ்பிடலில் இருந்தபோதும் அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார். புயல் வெள்ளமா வந்துவிட்டது.. அப்படி என்ன அவசரம்..? என கேள்வி எழுப்பினார். அதோடு இவர்தான் நாட்டு மக்களை காப்பாற்றுவது போல் நடிக்கிறார் என சாடினார். சிவாஜியால் கூட இந்த அளவுக்கு நடிக்க முடியாது என தாக்கி பேசினார்.
Read more: ரஷ்யா, ஜப்பானில் 8.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை!. பீதியில் மக்கள்!