உச்சக்கட்ட ஆபத்தில் எவரெஸ்ட்!. பனிப்பாறைகளை உருக்கும் மனிதர்களின் சிறுநீர்!. ஆய்வில் அதிர்ச்சி!

Urine Everest 30kb

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் தங்கும் மலையேற்ற வீரர்களால் வெளியாகும் சிறுநீர் மற்றும் எரிபொருள் பயன்பாடு, அங்கிருக்கும் பனிப்பாறைகளை வேகமாக உருக்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.


Regional Environmental Change என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை, நேபாளத்தின் முதன்மை நில அளவையாளரும் புவிசார் விஞ்ஞானியுமான கிம் லால் கெளதம் (Khim Lal Gautam) தலைமையிலான குழுவினர் நடத்தியுள்ளனர். ஆய்வில், உயரமான பகுதியில் நீரிழப்பைத் தடுக்க பயணிகள் அதிகளவில் தண்ணீர் குடிப்பதால், அங்கு நாள் ஒன்றுக்கு 6,000 லிட்டருக்கும் அதிகமான சிறுநீர் உருவாகிறது. திடக் கழிவுகள் அகற்றப்பட்டாலும், சிறுநீர் நேரடியாக பனிப்பாறைகளிலேயே வெளியேற்றப்படுகிறது. மனித உடலின் வெப்பம் பனியை விட அதிகமாக இருப்பதால், இது பனி உருகுவதை துரிதப்படுத்துகிறது.

2023 வசந்த காலத்தில், 1,600 கூடாரங்கள் அமைக்கப்பட்ட தற்காலிக கிராமம் போல செயல்பட்ட இந்த முகாமில், சமையல் மற்றும் வெப்ப தேவைகளுக்காக 824 எல்.பி.ஜி கேஸ்கள், 18,935 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 5,130 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எரிபொருட்கள் மற்றும் சிறுநீரால் உருவான மொத்த வெப்ப ஆற்றல் 8,49,174 மெகாஜூலை எட்டியுள்ளது. இது 2023 பருவத்தில் மட்டும் சுமார் 2,492 டன் பனியை உருக்க போதுமானது. இதில் சிறுநீரால் மட்டும் 154 டன் பனி உருகியுள்ளது.

1991 முதல் 2023 வரையிலான செயற்கைக்கோள் தரவுகளின்படி, அடிவார முகாமின் மேற்பரப்பு வெப்பநிலை ஆண்டிற்கு சராசரியாக 0.28°C உயர்ந்து வருகிறது. இது கும்பூ (Khumbu) பனிப்பாறையின் பிற பகுதிகளை விட இரண்டு மடங்கு அதிவேக உயர்வாகும். ஹெலிகாப்டர்கள் மற்றும் மனிதர்களின் நேரடி உடல் வெப்பம் இதில் கணக்கிடப்படவில்லை என்பதால், உண்மையான பாதிப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காலநிலை மாற்றத்துடன் சேர்ந்து மனிதர்களின் செயல்பாடுகளும் சுற்றுச்சூழல் பாதிப்பை தீவிரப்படுத்துவதால், அடிவார முகாமை பனிப்பாறை இல்லாத தென்மேற்கு பகுதியிலுள்ள பாதுகாப்பான நிலப்பரப்பிற்கு மாற்ற வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

கேரளாவில் பயங்கர விபத்து!. சுக்குநூறான கார்!. தமிழ்நாட்டை சேர்ந்த 8 எஞ்சினியரிங் மாணவர்கள் பலி!.

Sat Sep 5 , 2026
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டை சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள பனம்பரிக்குன்னு பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு 11:40 மணியளவில் பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக […]
kerala accident 30kb

You May Like