ஹார்டு டிஸ்கில் முன்னாள் காதலியின் நிர்வாண வீடியோ..! ஓபன் செய்து பார்த்ததும் ஆடிப்போன புது காதலி..! கடைசியில் காதலனுக்கு நேர்ந்த சம்பவம்..!

Video 2025

சிங்கப்பூரில் பணியாற்றி வந்த 44 வயதான தென் கொரிய நபர் ஒருவர், கடந்த 2022-ஆம் ஆண்டு ‘டிண்டர்’ செயலி வாயிலாக 45 வயது கொரிய பெண் ஒருவருடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு நாடுகளில் வசித்து வந்த சூழலில், வீடியோ அழைப்புகள் மூலமாகவே தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். அந்த சமயங்களில் இருவரும் எல்லை மீறி நிர்வாண வீடியோ அழைப்புகளில் ஈடுபட்டபோது, அதனை பதிவு செய்ய வேண்டாம் என அந்த பெண் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அந்த நபர், தனக்கு வீடியோவை பதிவு செய்யவே தெரியாது என பொய் சொல்லி சமாளித்துள்ளார்.


ஆனால், 2023 பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், சுமார் 7 முதல் 55 நிமிடங்கள் வரையிலான 17 நிர்வாண வீடியோ அழைப்புகளை ரகசியமாக பதிவு செய்துள்ளார். பின்னர் அவற்றை தனது தனிப்பட்ட பாலியல் திருப்திக்காக பயன்படுத்தி வந்ததுடன், சிங்கப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்த ஹார்டு டிரைவிலும் பத்திரமாக சேமித்து வைத்துள்ளார். 2024 ஜனவரியில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் முறிந்த நிலையில், அந்த நபர் 37 வயதுடைய மற்றொரு பெண்ணுடன் புதிய காதலில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2024 ஜனவரி 6 அன்று வீட்டை சுத்தம் செய்த அந்த புதிய காதலியின் கைகளில் ஹார்டு டிரைவ் சிக்கியுள்ளது. அதில் இருந்த முன்னாள் காதலியின் நிர்வாண காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அவற்றை அழிக்க வேண்டும் என காதலனை எச்சரித்துள்ளார். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து அந்த நபரும் வீடியோக்களை அவசர அவசரமாக அழித்துள்ளார். தொடர்ந்து மே மாதம் புதிய காதலி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த விவகாரத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதைப்பார்த்து பேரதிர்ச்சி அடைந்த முன்னாள் காதலி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை எண்ணங்கள் வருவதாக அந்த நபரை தொடர்பு கொண்டு ஆவேசப்பட்டுள்ளார். ஆனால், ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக அந்த நபர் திமிராக பதில் அளித்துள்ளார். எனினும், அந்த நபர் அழிப்பதற்கு முன்பாகவே புதிய காதலி அந்த வீடியோக்களை ரகசியமாக நகலெடுத்து (Copy) காவல்துறையிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டார். இதையடுத்து முன்னாள் காதலியும் தன் பங்கிற்கு போலீசில் முறைப்படி புகார் அளித்தார்.

நீதிமன்ற விசாரணையின்போது, குற்றவாளி தரப்பில் இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாகவும், கருணை காட்ட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. எனினும், பெண்ணின் அனுமதியின்றி படம்பிடித்தது மற்றும் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

Read More : தவெக வேட்பாளர்களை விரட்டியடிக்கும் மக்கள்..!! தேர்தல் கமிஷனை நாடும் அமைச்சர்கள்..!! சூடுபிடிக்கும் களம்..!!

Next Post

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்த பெண் துடிதுடித்து பலி!. விநாயகர் சதுர்த்தி விழாவில் நிகழ்ந்த சோகம்!.

Tue Sep 22 , 2026
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகா சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான சமையலின் போது, 46 வயதான சுஜாதா என்ற பெண் எதிர்பாராதவிதமாக கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவின் எல்.ராவ் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை காலை அன்னதானத்திற்கான உணவு சமைக்கும் பணியில் அமைப்பாளர்களுக்கு […]
sambar pot women 30kb

You May Like