சட்டப்பேரவை அறிவிப்பின் பேரில் துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணைத்தொகை வழங்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, EPF ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்கள் தற்போது ரூ.900/- முதல் ரூ.2,190/- வரை மட்டுமே ஒய்வூதியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக கருணைத் தொகை (EX gratis) வழங்கப்படும். இத்தொகை ஆணையர் அலுவலகத்தில் பேணப்படும் மையநிதி வட்டித் தொகையிலிருந்து வழங்கப்படும். மேலும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் கருணைத் தொகை வழங்கப்படும்.
EPF திட்டத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் துறை நிலையிலான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவோருக்கும் இடையே உள்ள வித்தியாசத் தொகையினை கருணை ஓய்வூதியமாக (Ex-gratia) வழங்கலாம் எனவும், மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ.4000/-லிருந்து ரூ.5000/-ஆகவும். குடும்ப ஓய்வூதிய தொகை ரூ.2000/-லிருந்து ரூ.2500/-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து EPF திட்டத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களுக்கான மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, துறை நிலையிலான ஓய்வூதியத்திற்கும் பணியாளர் சேமநலநிதி திட்டத்தின் (EPF) மூலம் பெறப்படும் ஓய்வூதியத்திற்கும் உள்ள வித்தியாச தொகையை அதாவது EPF திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000/- பெறும் நிலையில், அதிகபட்சமாக வழங்க வேண்டிய கருணை தொகை ரூ.4000/- என்றவாறும், மேலும், EPF திட்டத்தில் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.500/- பெறும் நிலையில், அதிகபட்சமாக வழங்க வேண்டிய கருணை தொகை ரூ.2000/- என்றவாறும், கருணைத் தொகை (Ex-gratia) வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்படி கருணைத் தொகையினை தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 49(1) 48(1), 46(1) என விளம்புகை செய்யப்பட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு. ஆணையரின் மையநிதி மூலமாகவும், முதுநிலை திருக்கோயில்கள் உள்ளிட்ட அறநிலைய சட்டப்பிரிவு 46(1)-இன் கீழான திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று. இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் திருக்கோயில்களி நிதியிலிருந்து வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.