‘கைலி, பனியனுடன் மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்..!!’ வியந்து பார்த்த மக்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

புதுச்சேரி முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல் மூட்டை தூக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் கமலக்கண்ணன். இவர் அமைச்சராக பணியாற்றிய போதும் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் விளைநிலங்களில் விவசாயம் செய்து வருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றதால், அரசு அலுவலகங்களில் கோப்புகளுடன் பிசியாக இருந்த அமைச்சர், அதன் பிறகு முழு நேர விவசாயப் பணியில் மூழ்கி விட்டார். தற்போது இவர் தனது விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்பகரத்தூர் சின்ன கடை தெருவில் உள்ள தனியார் கடைக்கு லுங்கி, பனியன் அணிந்து டிராக்டரில் வந்த முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், தனது விவசாய கூலி தொழிலாளிகளுடன் நெல் மூட்டைகளை சர்வ சாதாரணமாக தலையில் சுமந்து, கடையில் இறக்கி வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இந்த வேலையை செய்தால் தான் சாப்பாட்டுக்கு அரிசி கிடைக்கும் எனவும், எதிரில் நின்ற காய்கறி பயிரிடும் விவசாயியைக் கை காட்டி, அவர் காய்கறி பறிக்கவில்லை என்றால் குழம்பு வைக்க முடியுமா? என முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கேள்வி கேட்பதும் பதிவாகியுள்ளது.

Next Post

'பாலிவுட் அரசியலால் தான் விலகினேன்..' - பிரியங்கா சோப்ரா பேட்டி!

Sat Apr 27 , 2024
ஆரம்பத்தில் சினிமாவில் அதிக நிராகரிப்புகளை சந்தித்ததாகவும் இப்போது பாலிவுட்டில் இருந்து விலகி இருக்க அங்கு நிலவும் அரசியல் தான் காரணம் எனவும் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார். இப்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் இருந்து பிரேக் எடுத்தது மற்றும் இங்கு ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த நிராகரிப்புகள் பற்றியும் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில் […]

You May Like