தேசிய கல்வி உதவித்தொகைக்கு செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26 கல்வியாண்டில் தேசிய கல்வி உதவித் தொகைக்காக, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 2025 ஜூன் 2, முதல், விண்ணப்பிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், முதலில் ஒரு முறை பதிவை நிறைவு செய்து அதன் பிறகு கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்த முழு விவரங்களை https://scholarships.gov.in/studentFAQs என்ற இணையப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தொடக்கக் கல்விக்கு பிறகு இடைநிற்றலை தவிர்ப்பதற்காக தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மூலம் இந்த தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.