அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை முறைப்படுத்தும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வித் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று முதல் 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் மலையிடப் பகுதியில் அமையும் பட்சத்தில், அதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.