தமிழகத்தில் 2 கோடியே 22 லட்சத்து 59,224 குடும்ப அட்டைகள் உள்ளன. 18 லட்சத்து 9 ஆயிரத்து 677 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் சார்பில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் பொருட்களை பெறுவதற்காக 2 முறை கைவிரல் ரேகை வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதையும் ஒரே ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் பொருட்களை எளிதாக பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயோமெட்ரிக் திட்டத்தின்படி, ரேஷன் கார்டுகளில் பெயர் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே, ரேஷன் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். இதற்காக வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவியில் கைரேகையைப் பதிவு செய்வது அவசியமாகும்.
ஆன்லைன் சரிபார்ப்புக்கு, ‘Mera eKYC’ செயலி அல்லது NFSA போர்ட்டலைப் பயன்படுத்தலாம். அதில் கேஒய்சி சரிபார்ப்பை ஆதார் எண் மற்றும் OTP மூலம் முடிக்கலாம். 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். ஒருவேளை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரேஷன் கார்டு பயன்படுத்தாமல் இருந்து அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டால் அதை மீண்டும் பெற முடியும். அதாவது, அடுத்த மூன்று மாதங்களுக்குள் kyc சரிபார்ப்பை முடித்துவிட்டு ரேஷன் கார்டை ஆக்டிவேட் செய்யலாம். அப்படி செய்ய முடியாவிட்டால் மீண்டும் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.