போன் கேலரியில் ஆதார் கார்டு வைப்பது பாதுகாப்பனதல்ல என்று பிரபல சைபர் செக்யூரிட்டி நிபுணர் ரக்ஷித் டாண்டன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆதார் என்பது ஒரு தனி நபரின் அடையாளத்தை உறுதி செய்யும் நோக்கத்திற்காக, இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண் ஆகும். வங்கி தொடர்பான விஷயங்களாக இருக்கட்டும், டிக்கெட் முன்பதிவாக இருக்கட்டும், இப்படி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, முதலில் நம்மிடம் கேட்பது ஆதார் கார்டு தான்.
ஆனால், நாம் ஆதார் கார்ட்டையோ அல்லது அதன் ஜெராக்ஸையோ எப்போதும் கையில் வைத்துக்கொண்டே இருப்பதில்லை. ஆனால் அதற்கு மாறாக செல்போன் கேலரியில் சேவ் செய்து வைக்கிறோம். ஆனால் போன் கேலரியில் ஆதார் கார்டு வைப்பது பாதுகாப்பனதல்ல என்று பிரபல சைபர் செக்யூரிட்டி நிபுணர் ரக்ஷித் டாண்டன் அறிவுறுத்தியுள்ளார்.
ஹேங்கிங் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், ஒருவரின் ஆதார் எண்ணை வைத்து அவரின் அனைத்து தனிப்பட்ட தகவல்களை ஆன்லைன் வழியாக திருடும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இத்தகைய குற்றங்கள் மேலும் நடக்காதிருக்க அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் செயல்பட வேண்டும்.
ஆதார், பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களின் போட்டோக்களை டிஜி லாக்கர்களின் சேவ் செய்து வைப்பது நல்லது என்றார். போனில் சில ஆப்களை இன்ஸ்டால் செய்யும் போது அவை கேலர் அனுமதி பெறுவதால் ஆபத்து அதிகரிக்கிறது என எச்சரிக்கை விடுத்தார்.
Read more: தமிழகத்தில் புதிய நோய் தொற்று ஏதுமில்லை.. மாஸ்க் கட்டாயமில்லை.. குட்நியூஸ் சொன்ன அமைச்சர் மா.சு.!