Flash : மீண்டும் ஷாக்..! ஒரே நாளில் ரூ.5,000 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

Gold silver new

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உய்ர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2.40 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

RUPA

Next Post

தூக்கில் பிணமாக தொங்கிய 2 வயது குழந்தை; அருகே தொங்கிய மேலும் 2 சடலங்கள்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்!

Wed Jul 15 , 2026
சேலம் மாவட்டம், மேட்டூா் அடுத்த ஆண்டிகரையைச் சோ்ந்தவா் 26 வயதான வல்லரசு. கட்டடத் தொழிலாளியான இவருக்கு 23 வயதான ஸ்ரீபிரியா என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு 4 வயதான மைவிழி என்ற மகளும், 2 வயதான தா்ஷன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், இவர்களுக்கு ஏற்பட்ட மோதலின் காரணமாக […]
WhatsApp Image 2026 07 06 at 11.38.03 AM

You May Like