தூக்கில் பிணமாக தொங்கிய 2 வயது குழந்தை; அருகே தொங்கிய மேலும் 2 சடலங்கள்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்!

சேலம் மாவட்டம், மேட்டூா் அடுத்த ஆண்டிகரையைச் சோ்ந்தவா் 26 வயதான வல்லரசு. கட்டடத் தொழிலாளியான இவருக்கு 23 வயதான ஸ்ரீபிரியா என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு 4 வயதான மைவிழி என்ற மகளும், 2 வயதான தா்ஷன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


மேலும், இவர்களுக்கு ஏற்பட்ட மோதலின் காரணமாக மேட்டூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் இருவரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா். மேலும், குஞ்சாண்டியூரில் உள்ள வாடகை வீடு ஒன்றில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வாடகைக்கு குடியேறி உள்ளனர்.

இந்த நிலையில், ஸ்ரீபிரியா மீண்டும் கா்ப்பமானாா். தனக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் இருப்பதால் தனக்கு மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று ஸ்ரீபிரியா கூறியுள்ளாா். ஆனால், அவரது கணவா் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீபிரியா, மேட்டூா் ராஜகணபதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும், அங்கு உள்ள தனியாா் பால் பண்ணை ஒன்றில் வேலைக்கு சோ்ந்துள்ளார். பின்னர் மீண்டும் குஞ்சாண்டியூா் சென்று, மீண்டும் வல்லரசு தகராறில் ஈடுபட்டதால் அவர் மீண்டும் தாய் வீட்டிற்கே சென்றுவிட்டாா். அவரை சமாதானம் செய்து அழைத்துச் செல்வதற்காக வல்லரசு, தனது பெரியப்பா மாதேஸ்வரன், தம்பி அஜித் ஆகியோருடன் மாமியாா் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறிது நேரம் பேசிய பிறகு, மாதேஸ்வரன் மற்றும் அஜித் தங்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.

வல்லரசு தனது மாமியார் வீட்டில் தங்கியுள்ளார். அன்று இரவு வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்கச் சென்றாா். ஆனால் செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வல்லரசு எழுந்து வரவில்லை. இதனால் ஸ்ரீபிரியா மற்றும் அவரது தாய் கதவை தட்டினா். கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த இருவரும், அக்கம்பக்கத்தினா் உதவியோடு கதவை உடைத்தனா்.

அப்போது, வீட்டின் இரும்புச் சட்டத்தில் 2 குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தன. வல்லரசும் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன ஸ்ரீபிரியா கதறி துடித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். மேலும், குழந்தைகளைக் கொன்றுவிட்டு வல்லரசு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: “தந்தை, மகன் இருவருடனும் உல்லாசம்”; ஹேண்ட் பேக்கில் இருந்த ஆணுறையால் சிக்கிய பெண்..

Saranya

Next Post

"என்ன திட்டிட்டீங்கள்ல… நான் உயிரோட இருக்க மாட்டேன்" பிறந்த நாள் கொண்டாடியதை  கண்டித்ததால் சிறுமி செய்த காரியம்..

Wed Jul 15 , 2026
ஒரு காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தும், ஒழுக்கப்படுத்தியும் வளர்ப்பது இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தாலே சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களையே தாக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. மறுபுறம், ஆசிரியர்களின் சிறிய கண்டிப்பைக் கூட மனதில் ஏற்றுக்கொள்ள முடியாமல் சில மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதேபோல், […]
suicide NCRB report

You May Like