கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தந்தால் ஏன் கதறுகிறீர்கள்..? சோஃபா மாடல் ஆட்சியா..? முதல்வர் விஜய் பதிலடி..!

cm vijay assembly 1

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்..


கடும் எதிர்ப்புக்கு பின்னர் முதல்வர் விஜய் மீண்டும் பேசத் தொடங்கினார்.. அப்போது “ டாஸ்மாக் மட்டுமல்லாமல் பல துறைகளில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டது.. அரசு பணத்தை தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம் ஏற்கனவே தொட்டவர்களை விடமாட்டோம்.. மக்கள் பணத்தை தொட்டவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம்.. திமுக தயவால் தான் இந்த ஆட்சி நடக்கிறது என்று புதிய ஆயுதத்தை எடுத்துள்ளனர்.. மக்கள் தயவால் தான் இந்த ஆட்சி நடக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளாக் தான் இந்த ஆட்சி நடக்கிறது.. நீங்கள் அனுப்பி வைத்தவர்கள் என்றால், அமைச்சர் பதவி தந்தால் ஏன் கதறுகிறீர்கள்..? மா. கம்யூனிஸ்ட் நமக்கு தந்தது சுயேட்சையாக எடுத்த முடிவு என சொல்கின்றனர்..

ஊழலில் ஊறி போனவர்களால் ஆட்சியில் பங்கு என்பது அளிக்க முடியாது.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சோஃபா மாடல் அரசு விமர்சிக்கின்றனர்.. அது என்னவென்று புரியவே என பல நாட்கள் ஆனது.. சோஃபா, ஃபர்னிச்சர் பிஸ்னஸ் எல்லாம் வெளியே செய்ய சொல்லுங்க.. சட்டப்பேரவையில் வேண்டாம்.. எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தால் அதை ஏற்றுக் கொள்ள தயார்..” என்று தெரிவித்தார்..

Read More : Flash : முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் கடும் அமளி..! உதயநிதியின் மைக் ஆஃப்..!

RUPA

Next Post

சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாத்திட்டாரு.. முதல்வர் விஜய்யின் 30 நிமிடப் பேச்சில் 10 ரீல்ஸ் தேறும்.. உதயநிதி காட்டம்..!

Tue Jun 23 , 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு உண்மைக்கு மாறானது.. முதல்வர் பேச்சுக்கு என்ன ஆதாரம் உள்ளது..? சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் தவறான தகவலை முதல்வர் விஜய் பேசி உள்ளார்.. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்.. முதல்வர் விஜய் ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். ஸ்க்ரிப்டை பேசி முடிக்கும் […]
cm vijay udhaynidhi

You May Like