அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கப்போவதாக கூறிய செங்கோட்டையன், கடந்த வாரம் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து இன்று செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்..
இந்த நிலையில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த 2009-ம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார் இபிஎஸ்.. ஜெயலலிதாவால் 3 முறை முதல்வராக அமர்த்தப்பட்டவர் ஓபிஎஸ்.. ஆனால் இபிஎஸ் கொல்லைப்புறமாக முதல்வராக ஆனவர்.. அவர் முதல்வரானதற்கு வழிவகை செய்தவர் சசிகலா. முதலமைச்சராக ஆன பின் சசிகலாவை கொச்சையாக பேசினார்.. எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் இபிஎஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது..
நாடாளுமன்ற தேர்தலில் பணம் செலவு செய்தால் போதும் என சீட் வழங்கியவர் இபிஎஸ்.. அன்று ஒரு நிலை, இன்று ஒரு நிலை என இபிஎஸ் இருப்பது வேதனை அளிக்கிறது.. ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தவர் இபிஎஸ் தான்..” என்று தெரிவித்தார்.. பதவி தருவதாக ஓபிஎஸ்-ஐ அழைத்து வந்து பேசிய இபிஎஸ் பிறகு கைவிட்டார்.. முன்னேற வேண்டும் என்றால் சொந்தக்காலில் முன்னேற வேண்டும்.. மற்றவர் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது..
கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை.. எல்லாவற்றுக்கும் சிபிஐ கேட்கும் அதிமுக ஏன் இந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கேட்கவில்லை.. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை வைத்து திமுகவின் பி டீம் ஆக இருப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.. நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பாஜகவிற்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்..” என்று கூறினார்..
Read More : “விஜய் பித்தலாட்டம் செய்து வருகிறார்.. இதை யாருமே செய்ய மாட்டாங்க..” வைகோ காட்டம்..



