மாணவர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்..!

Minister Rajmohan School Students

நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.. டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் வெப்பம் தகித்து வருகிறது.. பல இடங்களில் வெயில் சதமடித்து வருவதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது..


எனினும் தமிழகத்தில் தொடர்ந்து வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது..

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது..

இந்த நிலையில் முதல்வரிடம் ஆலோசித்த பின் பள்ளி திறப்பு தேதி குறித்து அறிவிப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வர் “ ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.. வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம்.. வானிலை மையத்தின் அறிக்கை அடிப்படையில் முதல்வரிடம் ஆலோசித்த பின் பள்ளி திறப்பு தேதி குறித்து அறிவிப்போம்..” என்று கூறினார்..

தொடர்ந்து பேசிய அவர் பள்ளிகளில் போக்சோ சட்டங்கள் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.. காலை உணவு, மதிய உணவு உள்ளிட்ட திட்டங்கள் இந்த ஆட்சியில் மேம்படுத்தபப்ட்டு தொடரும்.. பள்ளி மாணவர்களுக்கான உணவு தரமாக இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

Read More : Flash : சென்னை மணலியில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்..!

English Summary

School Education Minister Rajmohan has stated that the date for reopening schools will be announced after consulting with the Chief Minister.

RUPA

Next Post

உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது? இது தமிழ்நாடா? உத்தரப்பிரதேசமா..? CM விஜய்யை விளாசிய உதயநிதி..!

Mon May 25 , 2026
Opposition Leader Udhayanidhi Stalin has severely criticized the Vijay-led TVK government over the rising crime rate in Tamil Nadu.
cm vijay udhanidhi

You May Like