Flash : மொத்தமாக தட்டி தூக்கிய விஜய்..! Ex. அமைச்சர், பிரபல இயக்குனர் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர்..!

tvk 2

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன..


தேர்தலுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.. குறிப்பாக சனிக்கிழமைகளில் தவெகவில் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்று வருகிறது..

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் தவெகவில் இன்று இணைந்தார்.. கம்பம் எம்.எல்.ஏ ஜெகன்நாய்ஹ் மிஸ்ரா, நடிகர் மன்சூர் அலிகான், இபிஎஸ் உறவினர் மேனகா பாலகிருஷ்ணன் தவெகவில் இணைந்தனர்..

நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தவெகவில் கம்பம் எம்.எல்.ஏ ஜெகன்நாத் மிஸ்ரா. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டைகள் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.. மேலும் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் இன்று தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். பிரபல இயக்குனர் ஆர்.வி. உதயகுமாரும் இன்று தவெகவில் இணைந்தார்..

Read More : 74 வயது மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. மௌன விரதமிருந்து மகளிர் பாதுகாப்பை பறிப்பது தான் மாற்றமா..? CM விஜய்க்கு நயினார் கேள்வி..!

RUPA

Next Post

Breaking : ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்..! திமுக கூட்டணியில் நீடிக்க முடியாது.. ஐயுஎம்எல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sat Jun 20 , 2026
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய […]
kadher moideen

You May Like