வங்க தேசம், நேபாளத்தை தொடர்ந்து மொரோக்காவிலும் வெடித்தது Gen Z போராட்டம்.. 3 பேர் பலி..!!

morocco

நேபாளம், வங்கதேசத்தைத் தொடர்ந்து, வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிலும் “ஜென் Z 212” என்ற பெயரில் இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். செப்டம்பர் 27 முதல், ரபாட், காசாபிளாங்கா, மராகேஷ், அகாடிர், டான்ஜியர் உட்பட 15 நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 1990 முதல் 2010 வரை பிறந்த Gen Z இளைஞர்கள் வழிநடத்தும் இந்த இயக்கம், டிக்டாக், டிஸ்கார்ட் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.


காரணங்கள்:

வேலையின்மை: வேலை இல்லாத இளைஞர்களின் விகிதம் 35.8% என உயர்ந்துள்ளது.

சுகாதாரச் சீரழிவு: அகாடிர் மருத்துவமனையில் 8 கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது உயிரிழந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்கள் “விளையாட்டு அரங்குகள் இருக்கிறது, மருத்துவமனைகள் எங்கே?” என முழக்கமிட்டனர்.

அரசின் முன்னுரிமைகள்: 2030 FIFA உலகக் கோப்பை, 2025 ஆப்பிரிக்கா கோப்பை ஆகியவற்றுக்காக பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகின்றன. ஆனால் சுகாதாரம், கல்வி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. மொராக்கோவில் 10,000 பேருக்கு 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் 25 எண்ணிக்கையை விட மிகக் குறைவு.

மோதல்கள் மற்றும் உயிரிழப்புகள்: லிக்ளியா, இனெஸ்கேன், ஓஜ்டா நகரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின. போலீஸ் கண்ணீர்ப் புகை, தடியடி பயன்படுத்த, மோதல்களில் 3 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் கைது, 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது, மொராக்கோவில் 2011 அரபு வசந்தம் மற்றும் 2016-17 ஹிராக் ரிஃப் போராட்டங்களுக்கு பின் உருவாகிய மிகப்பெரிய இளைஞர் எழுச்சியாகக் கருதப்படுகிறது.

Read more: அரசியல் வாதிகளால் ரஜினிக்கு பிரச்சனையும் வரக்கூடாது.. ஜெயலலிதா போட்ட ஆர்டர்..! என்ன நடந்தது..?

English Summary

Following Bangladesh and Nepal, Gen Z protests erupt in Morocco too.. 3 people killed..!!

Next Post

ஒரு துளி கண்ணீர் கூட வரல.. 10 கிலோ மிளகாய் சாப்பிடும் நபர்.. வைரல் வீடியோ!

Fri Oct 3 , 2025
மேகாலயாவின் மலைப்பகுதிகளில் இருந்து வெளியான ஒரு வீடியோ மீண்டும் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள படாவ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் பிர்து, மிளகாய் சாப்பிடும் திறனுக்காக பிரபலமானார். மீண்டும் வெளிவந்த ஒரு வைரல் வீடியோவில், ராம் 10 கிலோவுக்கு மேல் சூடான காய்ந்த மிளகாயை உட்கொள்வதை பார்க்கலாம்.. அதை சாப்பிடும் போது அவர் ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை.. அவருக்கு வியர்வையும் வரவில்லை.. […]
Meghalaya chilli man

You May Like