Flash : விசிகவை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் விஜய்க்கு ஆதரவு..!தவெகவின் பலம் 120-ஆக உயர்வு..

kadhar down 1778153113

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. இதையடுத்து திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் எழுதியது.. அதன்படி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் தவெவுக்கு ஆதரவு வழங்கின..


இந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது..இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் 2 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதம் செங்கோட்டையன் வசம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 118. 107 இடங்களை கைப்பற்றிய தவெகவுக்கு காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விசிக 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 ஆதரவு அளித்துள்ளனர்.. இதனால் தவெகவின் பலம் 120-ஆக உயர்ந்துள்ளது..

RUPA

Next Post

"துணை முதல்வராக திருமாவளவன்.. அமைச்சரவையிலும் விசிக பங்கு!" என்ன சொல்கிறார் வன்னியரசு..? கடைசி நேர அரசியல் ட்விஸ்ட்.!

Sat May 9 , 2026
"Thirumavalavan as Deputy Chief Minister.. Visika's role in the cabinet too!" What does Vanniyarasu say..? Last minute political twist.!
1344203

You May Like