திமுக-வில் இணைய போகும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி…! உண்மை என்ன..?

admk thangamani 2025

முன்னாள் அமைச்சராக இருந்தவர் தங்கமணி. 2021 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தங்கமணி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழும் தங்கமணி, அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி, “நான் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவும், திமுகவில் இருந்து எனக்கு அழைப்பு என்றும் செய்தி போட்டிருப்பது பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன். நான் ஆகஸ்ட் 11ஆம் தேதி தொண்டையில் சிறு அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருக்கும்போது இந்த செய்தி என்னை இன்னும் ரணம் அதிகமாக்கியது. நான் கடந்த வந்த அரசியல் பயணத்தில் எம்ஜிஆர், அம்மா மற்றும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என மூவரும் என இதயத்தில் என்றும் நினைத்துள்ளார்கள்.

அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது எனது உறவினர் என்பதையும் தாண்டி எங்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உயிரை விட மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளவன். ஆகையால், அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதை இந்த இயக்கத்தின் உயிர்மூச்சாக இருக்கிறேன்” என்று மறுப்பு தெரிவித்துள்ளார். எனது இறுதி மூச்சு உள்ளவரை அதிமுக இயக்கம் தான் என் உயிர் மூச்சு. மூச்சு நின்றதற்கு பிறகு எனது உடலில் அஇஅதிமுக கொடி போர்த்தி தான் இருக்கும். எனது அரசியல் எதிரிகளின் தவறான தகவல் தெரிவித்ததை செய்தியா வெளியிட்டுள்ளனர். இதை முழுமையாக மறுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் மைத்ரேயன், நேற்று காலை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பிரபல மருத்துவரான மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார்.

பின்னர், 1999 -ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், பழனிசாமி அணிக்கு தாவினார். பின்னர், 2022-ல் மைத்ரேயன், ஓபிஎஸ் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2023 ஜூன் மாதம் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் மீண்டும் 2024-ல் அவர் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக, அதிமுக என மாறி மாறி பயணித்த மைத்ரேயன் நேற்று காலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவர் இணைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

Vignesh

Next Post

சைவ உணவு முறை புற்றுநோயின் அபாயத்தை 25% குறைக்கிறது!. ஆய்வில் புதிய தகவல்!

Thu Aug 14 , 2025
சைவ உணவைப் பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய்க்கான ஆபத்து இறைச்சி உண்பவர்களை விட மிகக் குறைவு என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறைச்சி போன்ற உணவுகளை தவர்ப்பதன் மூலம், கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சமீபத்தில், ஒரு அறிவியல் ஆய்வு ஆச்சரியமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது, சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு இறைச்சி சாப்பிடுபவர்களை விட புற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. 80 […]
veg reduces risk cancer 11zon

You May Like