“அதிமுக போகிற போக்கே சரியில்லை..” திமுகவில் இணைந்த கார்த்திக் தொண்டைமான் பேட்டி..!!

Karthik Thondaiman

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் தொண்டைமான், அதிமுக மதவாத சக்தி கட்சிகளுக்கு உறுதுணையாக போகிறார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை.


அவர்களது செயல்பாடுகள் சரியில்லை. கட்சி போகின்ற போக்கே சரியில்லை. இதனால் தான் திமுகவில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்துடன், முதல்வர் மு.க ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழகம் நன்றாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. நான் அதற்கு உறுதுணையாக இருந்து அனைத்து கட்சி பணிகளையும், மாவட்ட கழகத்தில் இணைந்து நிச்சயமாக செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்று கார்த்திக் தொண்டைமானுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். திமுகவில் கார்த்திக் தொண்டைமான் இணைந்திருப்பது, புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக  கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Read more: தாலியோட ஈரம் கூட காயல.. முதலிரவு அறைக்கு சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

English Summary

Former AIADMK MLA from Pudukkottai Karthik Thondaiman joins DMK!!

Next Post

24 மணி நேரத்தில் 3 படுகொலை சம்பவம்.. காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்கள் நிலைமை..? - TTV தினகரன்

Wed Aug 6 , 2025
3 murders in 24 hours.. If the police department itself has no security, what about the public? - TTV Dinakaran
ttv dinakaran2234 1595052218

You May Like