EPS vs OPS| “அந்த ஆள்” “நீயெல்லாம் அதிமுகவையே விற்றிருப்பாய்!” எல்லை மீறும் எடப்பாடி.. பிரச்சாரத்தில் அதிர்ச்சி பேச்சு..!

eps campagin

தமிழக சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில தினங்களாக மற்ற கட்சியினரை விமர்சித்து பேசுவது பிரச்சாரத்தில் தலைதூக்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக பேசியிருந்தார்.


இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை, பால்டாயில் குடித்து போயிருக்க வேண்டும்.. இருந்து கொண்டு நம் உயிரை வாங்குவதாக எல்லை மீறி பேசியிருந்தார். இது அதிமுகவினர் மத்தியிலும் மற்ற கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நான் துரோகம் செய்யக் கூடியவராம்.. யாருக்கு துரோகம் செய்தோம்? எங்கள் கட்சியில் இருந்தவர்களை பி டீமாக்கி அதிமுகவை உடைக்க நினைத்த திமுகவே துரோகி. அதிமுகவில் ஓபிஎஸ்க்கு எவ்வளவு மரியாதை கொடுத்தோம். ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். துணை முதல்வர் பதவி கொடுத்தோம்.

அதிமுகவில் இருந்தவ்ர்களை பி டீமாக்கி கட்சியை உடைக்க நினைத்த துரோகி நீ.. உன்னை கட்சியில் சேர்த்திருந்தால், அதிமுகவையே விற்பனை செய்துவிட்டு போயிருப்பீர்கள். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா மன்னிக்காது என்று விமர்சித்துள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தை அந்த ஆள் என ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் வாக்குறுதிகளை அளிப்பதிலும், அரசியல் ரீதியான கருத்துக்களை முன்வைக்க படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கி பேசுவது அரசியல் நாகரிகமாக இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Subscribe to my YouTube Channel

Read more: Benefits of Walking: தினமும் நடைப்பயிற்சி செய்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

English Summary

Former Chief Minister Edappadi Palaniswami’s use of the word OPS in the singular has caused controversy.

Next Post

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்..! இனி ரொக்கமாக பணம் செலுத்த முடியாது..! புதிய விதிகள்..!

Wed Apr 8 , 2026
மத்திய அரசு சுங்கக் கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. தற்போதுள்ள விதிகளுக்குப் பதிலாக புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இவை ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமலுக்கு வரும். இனிமேல், நெடுஞ்சாலைகளில் ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்குத் தடை விதிக்கப்படும். மேலும், யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தினால் அதிக கட்டணம், அடையாள அட்டைகளுக்கான விலக்குகள் நிறுத்தப்படுதல் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் […]
20250705035133 Toll P

You May Like