“38 நாட்களில் 126 பாலியல் குற்றங்கள்.. சிங்கப்பெண் சிறப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை..” இபிஎஸ் விளாசல்..!

eps vijay n

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்ட அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது.. ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ அறிவிப்புகளோ இல்லை.. சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..


போதை பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது.. 38 நாட்களில் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. 38 நாட்களில் பாலியல் குற்றங்கள் மட்டும் 126.. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற ஒன்றை உருவாக்கி உள்ளனர், அவர்களுக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது..

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை தவெக அரசு நிறைவேற்றவில்லை.. நடப்பாண்டில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படவில்லை.. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.. கர்நாடக அரசிடமிருந்து தண்ணீரை கேட்டுப்பெற இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. தேர்தல் வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆட்சிக்கு முன்னர் பெண்கள் பாதுக்காப்பு குறித்து வீர வசனம் பேசுபவர்கள் இன்று நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக உள்ளனர்.. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் தூங்க முடியாத நிலை உள்ளது..

தமிழக மக்களின் தூக்கத்தை தொலைத்த அரசாங்கம் தவெக அரசாங்கம்.. மின் வெட்டுக்கு அணில் காரணம் என முந்தைய அரசு கூறியது, பீஸ் கேரியர் திருட்டே காரணம் என தவெக அரசு கூறுகிறது.. சட்டம் ஒழுங்கை காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் தவெக அரசு எடுக்கவில்லை.. ” என்று தெரிவித்தார்..

Read More : Flash : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 23-ம் தேதி வரை நடைபெறும்.. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு..!

RUPA

Next Post

“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்.. அவர் அதிமுகவில் எந்த பதவியிலும் இல்லை” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்..!

Thu Jun 18 , 2026
2026 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார்.. அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.. அப்போது இபிஎஸ் மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற […]
eps mithun

You May Like