நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…! தமிழக அரசு அறிவிப்பு…!

money tn govt 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 3 ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தால் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள். மேலும் இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 50 பேர் நான் முதல்வன் மாணவர்கள். இப்படி நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி வருகிறது.

இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை மண்டலங்களில் வங்கி தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளுக்கு (SSC, IBPS, RRB) பயிற்சி அளிக்க பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 300 மாணவர்களுக்கும், மதுரை, கோவை மண்டலத்தில் தலா 350 மாணவர்களுக்கு கட்டணமின்றி தங்குமிடம், உணவு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read more: அசத்தல்.. செயற்கை ரத்தத்தை உருவாக்கிய ஜப்பான்..! எல்லா ரத்த வகைக்கும் பொருந்தும்..

Vignesh

Next Post

இன்றுதான் ஜூலை 5!. பாபா வங்கா சொன்ன மாதிரியே நடந்துருச்சு!. நிலத்தடியில் அதிர்வை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Sat Jul 5 , 2025
ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி பேரழிவு நிகழும் என்று புதிய பாபா வங்கா கணித்த ஜூலை 5 இன்றுதான். கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற பெண் ‘புதிய பாபா வங்கா’ என அழைக்கப்படுகிறார். மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோபு பூகம்பம், பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற […]
Nankai Trough baba vanga tsunami 11zon

You May Like