தீபாவளிக்கு ரேஷனில் இலவசமாக மளிகை பொருள், சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும்…!

Ration 2025

ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு இலவசமாக மளிகை, சர்க்கரை, எண்ணெய் வழங்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது.


புதுச்சேரியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் கடந்த தீபாவளிக்கு முன்பாக திறக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரை இலவசமாக தரும் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரேஷனில் அரிசி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷனில் அரிசி தரப்படவில்லை. அரிசிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் ரேஷனில் விடுபட்ட அனைத்து மாதங்களுக்கும் இலவச அரிசியை தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வரும் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச பொருட்கள் தர அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பான கான்பெட் நிர்வாக இயக்குநர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி முழுக்க தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு மளிகை, சர்க்கரை, எண்ணெய் இலவச விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்காக குறுகிய கால மின்னணு ஏலம் விடப்படுகிறது. டெண்டர் எடுக்க விரும்புவோர் வரும் அக்டோபர் 3-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பரபரப்பு...! நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் நிகழ்ச்சி பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிப்பு...!

Sat Sep 27 , 2025
பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரில் அடிக்கப்பட்டுள்ள பேனரில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் இடம்பெறவில்லை. தமிழக பாஜகவினர் பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை இருவார நிகழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மருத்துவ முகாம்கள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, படகு போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரதமர் மோடியின் சாதனைகள், […]
a malai banner 2025

You May Like