உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குமாரியா கிராமத்தை சேர்ந்தவர் 54 வயதான சுஷிலா தேவி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுஷிலா தேவியின் இளைய மருமகள் பூஜா, அவளது சகோதரி கமலா மற்றும் கமலாவின் காதலர் அனில் வெர்மா ஆகியோர் இந்த கொலைக்குப் பின்னால் உள்ளனர் என போலீசார் உறுதி செய்தனர்.
பூஜாவின் கணவர் இறந்த பின்னர், அவள் தனது மைத்துனருடன் உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் மாமியார் சுஷிலா தேவிக்கும் பூஜாக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பூஜா குடும்ப நிலத்தை விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு மாமியார் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்துள்ளனர். சுஷிலாவை கொன்று, வீட்டு நகைகள் மற்றும் பொருட்கள் ரூ.8 லட்சம் மதிப்பில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அனில் வெர்மா விற்க முயன்றபோது போலீசில் கையும் களவுமாக சிக்கினார். தப்பிக்க முயன்ற போது போலீசார் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அனில் தற்போது ஜான்சி மருத்துவக் கல்லூரியில் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் மேற்கொண்ட விசாரணை 3 பேர் கூட்டு சதி செய்து கொலை செய்தது தெரியவந்தது. தற்போது பூஜா, கமலா இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையை விரிவாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நிகிதா ரூ.25 லட்சம் மோசடி செய்தது அம்பலம்.. அஜித் மரண வழக்கில் எழும் பல கேள்விகள்.. ஆனால் பதில்..?