தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை எதிர் கொள்வதால், இளைஞர்கள் பலரும் ஆவலுடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். அதிலும் பலரும் விஜய் பிரசாரத்தில் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை மற்றும் வெளிர் காக்கி நிற பேண்ட் அணிந்து கொண்டு வாக்கு செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரை பிரபலங்கள் பலரும் வெள்ளை நிற சட்டை காக்கி பேண்ட் அணிந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் தவெக தலைவர் விஜய்யின் தந்தை, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். வாக்களிக்க வந்த விஜய்யின் பெற்றோர் இருவரும் ஒருமித்த நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் வெள்ளை மற்றும் காக்கி கலந்த ஆடைகளை அணிந்திருந்தனர்.
நடிகர் சிபி சத்யராஜ், விஜய்யை போல் வெள்ளை நிற சட்டை, காக்கி நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார். அவர் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவளித்து வருகிறார். வாக்குப் பதிவு நாளில் தவெகவினர் அனைவரும் விஜய்யை போல் ஒரே மாதிரியான ஆடை அணிவதாக கூறப்பட்ட நிலையில் சிபியும் அதே நிற ஆடை அணிந்து வந்திருந்தார்.
நடிகர் விக்ரம் வாக்குச்சாவடிக்கு வந்த போது விஜய் போலவே வெள்ளை நிற சட்டை வெளிர் காக்கி பேண்ட் அணிந்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. அதே போல் நடிகர் விஜயின் ரீல் தம்பியான ஜெய் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். இன்றைய தினம் வாக்குச்சாவடிக்கு வந்த ஜெய் விஜயை போலவே காக்கி பேண்ட் வெள்ளை சட்டை அணிந்திருதார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விஜய் ஸ்டைலில் வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தனது உடைக்கும் மற்ற கட்சிகளின் குறியீடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்த அண்ணாமலை, “நான் காவல் துறையில் பணியாற்றியவன் என்பதால் காக்கி நிறத்தின் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால் காக்கி பேண்ட் அணிகிறேன். அரசியலுக்கு வந்த பிறகு வெள்ளைச் சட்டை அணிவது வழக்கமாகிவிட்டது.” என்றார்.
அதேபோல், சரவணன் மீனாட்சி பிரபலன் ரச்சிதா மகாலட்சுமி தனது எக்ஸ் பக்கத்தில், தான் வெள்ளை நிறச் சட்டை அணிந்து கொண்டும், வெளிர் காக்கி நிறத்தில் கார்கோ பேண்ட் அணிந்து கொண்டும் தான் எடுத்துக் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது
திருச்சி கிழக்குத் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் தவெக தலைவர் விஜய் பாணியிலான வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வாக்குச்சாவடிகளுக்குத் திரண்டனர்.
Read more: ‘டிரம்ப், வாயை மூடு’: அமெரிக்க அதிபரை பங்கம் செய்த ஈரான்.. புதிய AI வீடியோ..!



