செக்..! இனி தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்…! கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

Anbil Mahesh School Mask 2025

அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையான வினாத்தாள்களை எமிஸ் தளத்தில் டிச.3-ம் தேதி வரை மாவட்டக் கல்வி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின்னர் பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்டும்.தொடர்ந்து வினாத்தாள்களை வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில் வைத்து தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய தினம் காலை 9 மணியில் இருந்து பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் மொத்தம் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்..? எந்தெந்த இடங்கள் சிறந்தது..?

Tue Dec 2 , 2025
நம்முடைய ஆன்மீக வழிபாடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது தீப வழிபாடாகும். முறையான பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் தெரியாதவர்கள் கூட, காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் விளக்கேற்றி, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; வீட்டில் உள்ள தீய சக்திகள் யாவும் விலகி, மகாலட்சுமியின் அருள் முழுமையாக ஸித்திக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. அத்தகைய தீப வழிபாட்டைச் சிறப்பிக்கும் மாதமே திருக்கார்த்திகை மாதம். இம்மாதத்தில் வீடுகளில் […]
Karthigai Deepam 2025

You May Like