குட் நியூஸ்‌…! இனி இவர்களின் கல்வி & விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் தமிழக அரசே ஏற்கும்…!

Tn Govt 2025

சென்னையில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். எனவே, தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்விக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


சென்னை மாவட்டத்தில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர் கல்வி பயிலும் போது அவர்களும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் பயனடைய ஏதுவாக இத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை முற்றிலுமாக தளர்வு செய்து அரசாணை பெறப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயனபெற விரும்பும் திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை சான்றாக சமர்ப்பித்து, வருமான உச்சவரம்பு ஏதுமின்றி, பிற உதவித் தொகை ஏதேனும் பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்விக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ராமர் வழிபடப்படும் இந்த கிராமத்தில் ஹனுமான் பெயரை சொல்லக் கூட தடை.. ராமாயண காலம் முதல் கோபத்தில் இருக்கும் மக்கள்.. ஏன்?

Sat Jul 19 , 2025
இந்தியாவில் ராமர் வணங்கப்படும் இந்த கிராமத்தில், ஹனுமான் பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. கலியுகத்தில் அதிகம் வணங்கப்படும் கடவுள்களில் ஒருவராக ஹனுமான் இருக்கிறார்.. ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும் ஹனுமான் கோயில் இருப்பதை நாம் பார்க்கலாம்.. ஆனால் இந்தியாவில் ஹனுமான் என்ற பெயரை உச்சரிப்பது தடைசெய்யப்பட்ட ஒரு இடம் உள்ளது. ஆம்.. இந்தியாவில் ராமர் வழிபடும் ஒரு கிராமத்தில் ஹனுமானை வணங்க தடை செய்யப்பட்டுள்ளது.. இங்கு ஹனுமானுக்கு எந்த கோயிலும் […]
1593764413 bowoshsm

You May Like