“தமிழகத்தில் இனி ஆன்மீக ஆட்சி தான்” முதலமைச்சரே சன்னியாசிக்கு முன் தரையில் தான் அமர வேண்டும்..!! -அண்ணாமலை

annamalai

கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற குரு பௌர்ணமி விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை தமிழகத்தில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆன்மீக ஆட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது முடிந்தது. இதில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்த குரு பவுர்ணமி ஒரு விசேஷமான நாள். இந்நாளுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும். எனவே, இந்நாளில் குருவிடம் அருளாசி பெறும்போது, ஆன்மிகத்தை விரிவாக பார்க்கக்கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.

மிக மிக குறைவாக மூச்சு விடுகின்ற ஆமைக்கு ஆயுள் அதிகம் என்ற அண்ணாமலை பிராண ரகசியத்தை யார் உணர்ந்து கொள்கின்றனரோ, அவர்களுக்கு ஆயுள் அதிகம் என்றார். பூக்களால் நாம் செய்யக்கூடிய பூஜைகள், மணியின் வாயிலாக வரக்கூடிய ஓசைகள், தீபாரதனை வாயிலாக வரக்கூடிய வெப்பம் என, இவை அனைத்தும் ஜீவசமாதியில் இருக்கக்கூடியவர்களின் ஆன்மா இன்னும் வீரியமாகவும், பிரகாசமாகவும் இருக்க காரணமாகிறது.

ராஜாவாக இருந்தாலும், சன்னியாசிக்கு முன் தரையில்தான் அமர வேண்டும். இந்நாட்டில் ராஜா, முதலமைச்சர் என யாராக இருந்தாலும் சன்னியாசிகள் முன், என்று தரையில் அமர ஆரம்பிக்கிறார்களோ, அன்றுதான் உண்மையான ஆன்மிக ஆட்சி வந்துவிட்டது எனலாம். தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி அமையும். இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன், சனாதன தர்மம் காக்க சன்னியாசிகள் உடன் பயணிப்பேன்.

Read more: தெரு நாய்களுக்கு இனி தினமும் சிக்கன் ரைஸ்.. மாநகராட்சி நிர்வாகம் முடிவு..!! – பின்னணி இதோ

Next Post

தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்!. பிரதமர் மோடியை விமர்சித்த மோகன் பகவத்!. அரசியலில் சலசலப்பு!

Fri Jul 11 , 2025
வரும் செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது வயதை நிறைவு செய்யவுள்ள நிலையில், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், 75 வயதிற்குப் பிறகு தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று பேசிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற “குரு பூர்ணிமா” விழாவில் பேசிய மோகன் பகவத், வயதானவர்கள் வழிகாட்ட வேண்டும்; செயல்படவேண்டிய பொறுப்புகளை இளைஞர்கள் ஏற்க வேண்டும். இதுவே […]
Leaders Should Retire At 75 11zon

You May Like