சார்பதிவாளர் அலுவலகங்கள் வீடியோ காட்சிகளுடன் சேர்த்து குரல் பதிவுகளையும் கண்காணிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பதிவுத்துறையில் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் சொத்து ஆவண பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு ஆவணப்பதிவுகள் நடக்கின்றன. விசேஷ நாட்களில் கூடுதலாகவே டோக்கன் வழங்கப்படுகின்றன.. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது சொத்து உள்ளிட்ட பத்திரப்பதிவு விவகாரங்களை மக்கள் நேரடியாகவோ அல்லது இ சேவை மையங்கள் வாயிலாக எளிதாக பயன்படுத்தும் வகையில், ஆன்லைன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. சொத்துக்களை பதிய வேண்டும் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும் என்ற சூழல் தான் இருந்து வருகிறது. சொத்து விற்பனை, திருமணப் பதிவு, சங்கங்கள், நிறுவனங்கள் பதிவு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணமும் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான் பதிவாகின்றன.
சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வினை, நேரடியாகவே அறிந்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சார் பதிவாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஆனால், அவைகளில் வெறும் காட்சிகளை மட்டுமே கண்காணிக்க மட்டுமே முடியும். அதுவும், டிஜிபி அலுவலகத்தில் மட்டுமே கண்காணிக்க முடிகிறது. தற்போது வீடியோ காட்சிகளுடன் சேர்த்து குரல் பதிவுகளையும் கண்காணிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் டிஜிபி அலுவலகம் மட்டுமல்ல, தலைமை அலுவலகத்திலிருந்தும் நேரடியாக வீடியோ மற்றும் ஆடியோவை அறிந்து கொள்ள முடியும். இதனை தமிழக அரசு விரைவில் செயல்படுத்துகிறது.
Read More: மனித மண்டை ஓடுகளால் கோபுரங்களைக் கட்டிய கொடூர மன்னர்கள் யார் யார்? வரலாற்றின் இருண்ட பக்கங்கள்..