விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது 90 நாட்களைக் கடந்து இன்னும் ஒரு சில வாரத்தில் நிறைவடையுள்ளது. இதனால், காரசாரமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த மற்ற சீசன்களின் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்கின்றனர். அதிலும் கொளுத்திப் போடும் வேலையை வனிதாவுக்கு பிறகு கச்சிதமாக செய்த சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இவர் வந்த உடனேயே இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக ரசிகர்கள் யூகித்த விக்ரமனை வச்சு செய்கிறார். இதனால், நிகழ்ச்சி முன்பை விட சூடு பிடித்திருக்கிறது. ஆகையால், சுரேஷுக்கு பின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக இருக்க வேண்டும் என நினைத்த ஜிபி முத்து வருகை தருகிறார்.

இவர் முதல் ஆளாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வெகு சீக்கிரமே வெளியேறினார். இதனால் ஜிபி முத்துவின் மீது எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்ததால் மீண்டும் அவர், ஒரு வாரம் கெஸ்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறாராம். ஆகையால், ஜிபி முத்து என்ட்ரி கொடுத்தபின் ஜாலியாக மாறப்போகும் பிக்பாஸ் வீட்டை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும், ஜிபி முத்துவை போல் தனலட்சுமியும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தால் ஜிபி முத்து சம்பாதிப்பதை விட அவர் நிறைய படங்களில் கமிட்டாவது மட்டுமல்லாமல் புது வீடு கட்டி குடியேறினார். இந்த சூழலில் ஜிபி முத்துவை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர வைத்து டிஆர்பி-யை ஏற்ற விஜய் டிவி பிளான் போட்டு இருக்கிறது.