’சும்மா இல்ல’..!! ’ரூ.2.5 லட்சம் புரமோஷனுக்காக செலவு பண்ணிருக்கேன்’.!! பிக்பாஸ் போட்டியாளர் பகீர் தகவல்..!!

புரமோஷனுக்காக மட்டும் ரூ.2.5 லட்சம் செலவு செய்துள்ளதாக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் மனதில் இடம்பிடிக்க போட்டியாளர்கள் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து போட்டியை சேஃப்பாக விளையாடுகின்றனர். அதே வேளையில் இந்த நிகழ்ச்சியில் என்னதான் புகழ் பெற்றவர்கள் உள்ளே வந்தாலும் அவர்களுடைய நடவடிக்கைகளை வைத்துதான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள். இப்படித்தான் பிக்பாஸ் ஓவியாவுக்கு ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள். அதன் பின்னர் வந்த சீசன்களில் கூட சில போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கினாலும் ஓவியாவுக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கு வேறு யாருக்குமே கிடைக்கவில்லை என்பதை மறுக்கவே முடியாது. மேலும், சிலர் பணம் கொடுத்து தங்களை பிரமோஷன் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

’சும்மா இல்ல’..!! ’ரூ.2.5 லட்சம் புரமோஷனுக்காக செலவு பண்ணிருக்கேன்’.!! பிக்பாஸ் போட்டியாளர் பகீர் தகவல்..!!

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6-இல் கலந்து கொண்டுள்ள ராம் ராமசாமி, தனது பிரமோஷனுக்காக ரூ.2.5 லட்சம் செலவழித்துள்ளதாக சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. முந்தைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் இப்படித்தான் பணம் கொடுத்து பிரமோஷன் செய்தனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவருமே ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். ராபர்ட் மாஸ்டர் கமலிடம் தான் ஒரு சிங்கிள் என கூறிவிட்டு தனக்கு 22 வயதில் காதலி இருப்பதாக சக போட்டியாளரிடம் சொல்கிறார். அது போல் ராம் காசு கொடுத்து பிரமோஷன் செய்வதாக கூறுகிறார். இதனால் மக்களின் வாக்குகளுக்கு என்ன பலன் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Chella

Next Post

பலாத்காரம் செய்து வீடியோ.. 12 வயது பெண்ணுக்கு கூட்டு பலாத்காரம்.! வைரலான வீடியோ.!

Mon Oct 31 , 2022
ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பொறியியல் படித்த டிப்ளமோ மாணவர் உட்பட மூன்று மைனர் சிறுவர்களை, 12 வயது நிறைந்த மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள குற்றச்சாட்டில் போலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையில் சில நாட்களுக்கு முன்பு இது நடந்திருந்தாலும் அச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுவரை சிறுமி நடந்ததை தன் பெற்றோரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் அந்த வீடியோவை பார்த்து, […]

You May Like