ஜெய்பூர் மாமியாருடன் விவசாயத்தில் கலக்கும் ஜெர்மனி மருமகள்..!! மில்லியன் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ..!!

திருமணத்துக்குப் பின் கிட்டத்தட்ட இந்தியப் பெண்ணை போலவே மாறியுள்ள ஜெர்மனி பெண், தன் மாமியாருடன் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் க்யூட்டான வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளார்.


உலகில் சாதி, மதம், நிறம், பாலினம், மொழி என அனைத்தையும் தகர்த்து மனித சமூகம் தொடர்ந்து இயங்கி தழைத்தோங்க வித்திடும் சிறந்த திறவுகோல் காதல். அதிலும், பல வேறுபாடுகளைக் கடந்து திருமணத்தில் முடியும் காதல்களை மக்கள் என்றுமே கொண்டாடத் தயங்குவதில்லை. அந்த வகையில், நாடு, மொழி வேறுபாடுகளைக் கடந்து இந்தியர் ஒருவரை காதல் திருமணம் செய்த ஜெர்மனி பெண் ஒருவரின் இன்ஸ்டா பக்கம் நெட்டிசன்களை ஈர்த்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஜெய்பூர் மாமியாருடன் விவசாயத்தில் கலக்கும் ஜெர்மனி மருமகள்..!! மில்லியன் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ..!!

ஜூலி ஷர்மா என்ற இந்தப் பெண், அர்ஜூன் எனும் இந்தியரை மணந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெய்ப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், தன் கணவரை சந்தித்தது முதல், இந்தியாவுடனான தன் பிணைப்பு, கணவரின் குடும்பத்தார், மாமியார் உடனான உறவு என தன் வாழ்வின் சிறந்த பக்கங்கள் அனைத்தையும் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார். திருமணத்துக்குப் பின் கிட்டத்தட்ட இந்தியப் பெண்ணை போலவே மாறியுள்ள ஜூலி, முன்னதாக தன் மாமியாருடன் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் க்யூட்டான வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளார்.

ஜெய்பூர் மாமியாருடன் விவசாயத்தில் கலக்கும் ஜெர்மனி மருமகள்..!! மில்லியன் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ..!!

”நான் குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை மிகவும் ரசிக்கிறேன்! நான் ஏற்கனவே ஒரு மாதமாக எனது கணவரின் கிராமத்தில் தங்கியிருக்கிறேன். குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாகவும் இயற்கையுடன் மிகவும் நெருக்கமாகவும் வாழ்கிறேன்” என நெகிழ்ந்து இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களையும், மில்லியன் லைக்குகளையும் பெற்று இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த ஜூலி, புதிய கலாச்சாரத்திற்கு பழகி எளிமையாக வாழ்ந்து வருவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

வீடியோவை காண: https://www.instagram.com/reel/CkaJ2qfpc89/?utm_source=ig_web_button_share_sheet

CHELLA

Next Post

#கன்னியாகுமரி : ஒருநாள் முழுவதும் தண்ணீரில் மூழ்கிய மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை

Sun Nov 13 , 2022
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் திருவட்டாரில் உள்ள மடத்துவிளை கிராமத்தில் பந்தல் கட்டும் தொழிலாளி தங்கமணி மற்றும் மனைவி புஷ்பபாய்(60) வசித்து வந்துள்ளனர். மனைவி அருகில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ள, போது திடீரென்று ஆற்றில் மூழ்கி மாயமாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் தீயணைப்பு, மீட்பு படையினர் ஆற்றில் குளிக்க சென்ற மூதாட்டியை தேடி வந்துள்ளனர். தொடர்ந்து தேடியதில் நேற்று காலை 30 […]
n441295766166831392034155a08e41119394573e6f73b5aef4a41a60fd3f0bddc227f5553228ff6c5edbc2

You May Like