கானா அரசு நாட்டின் உயரிய விருதான’தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக நேற்று கானா சென்றடைந்தார். விமான நிலையத்தில் கானா அதிபர் மேதகு ஜான் டிராமணி மஹாமா, பிரதமருக்கு சிறப்பு மரியாதையுடன், பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தார். இந்த மரியாதை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை பிரதிபலித்தது. கடந்த மூன்று தசாப்தங்களில் பிரதமரின் கானா பயணம் இத்தகைய பயணங்களில் முதலாவதாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும். மேலும் ஆப்பிரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கு கூட்டாளிகளுடனான அதன் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாட்டின் உயரிய விருதான’தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ என்ற விருதை கானா அரசு பிரதமர் மோடிக்கு வழங்கியது.
விருதை வழங்கிய கானா அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்த கௌரவம் நமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம், அவர்களின் எண்ணங்கள், நமது வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவம் ஒரு பொறுப்பாகும்; வலுவான இந்தியா-கானா நட்புறவை நோக்கி தொடர்ந்து பாடுபடும். இந்தியா எப்போதும் கானா மக்களுடன் நிற்கும், மேலும் நம்பகமான நண்பராகவும் மேம்பாட்டு கூட்டாளியாகவும் தொடர்ந்து பங்களிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Read More: சேமிப்புக் கணக்கு இருக்கா ? இனி இதற்கு அபராதம் இல்லை! குட்நியூஸ் சொன்ன பிரபல வங்கி!