20 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸாகும் கில்லி!!

தரணி இயக்கத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் ஏப்ரல் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ’ஒக்கடு’ படத்தின் ரீமேக் ஆக கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது.

விஜய்யின் ஆக்‌ஷன், த்ரிஷாவின் க்யூட்னஸ், தரணியின் மேக்கிங், வித்யாசாகரின் சாங்ஸ், பிஜிஎம் என கில்லி வேற லெவலில் சொல்லி அடித்தது. அர்ஜுனரு வில்லு, அப்படிப் போடு, கொக்கர கொக்கரக்கோ என கில்லி பாடல்களின் வைப் 20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கின்றன. 

சமீபகாலமாக தமிழில் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷ் நடித்த ‘3’, சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வரவேற்பை பெற்றன.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் மூவியான கில்லி, இப்போது 2கே கிட்ஸ்களுக்கும் ட்ரீட்டாக அமையவுள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகிறது.இதற்கான புதிய ட்ரெய்லரும் இன்று வெளியாகிறது. பல மாதங்களாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இப்படத்தின் ரீரிலீஸ் தேதி குறித்து கேட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Next Post

மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! அடுத்தடுத்து வரும் சர்ப்ரைஸ் அறிவிப்பு..!! போக்குவரத்துத்துறை மாஸ்..!!

Wed Apr 3 , 2024
தமிழக போக்குவரத்துத் துறையில் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பார்வை […]

You May Like