Tn Govt: உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தம்… 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு..!

anbarasan 2025

2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.


குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டார் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மாவட்டம் வாரியாக அமைச்சர் அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு இலக்கிணை விரைவில் அடைய வேண்டும். மேலும் மாற்றுதிறனாளிகள், மகளிர், ஆதீதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிக எண்ணிக்கையில் கடன் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த 2023-2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் புதியதாக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டதின் கீழ் இதுவரை 2,970 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மானியத்துடன் ரூ.581 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,452 பயனாளிகளுக்கு ரூ.13.45 கோடி மானியத்துடன் ரூ.64.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல் படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலை இல்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்கள் முறைபடுத்துதல் திட்டம் உள்ளிட்ட ஆறு வகையான சுய வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 66,018 பயனாளிகளுக்கு ரூ 5,490.80 கோடி கடன் வழங்கப்பட்டு அரசின் வாயிலாக ரூ 2,133.26 கோடி மாணியமாக வழங்கப்பட்டுள்ளது.

இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலீட்டு மானியம், மின் மானியம், ஊதிய பட்டியல் மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 20,702 MSME நிறுவனங்களுக்கு ரூ.1,459.28 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் MSME துறை சார்பில் ரூ.63,573.11 கோடி முதலீடு செய்யும் வகையில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,610 நிறுவனங்கள் ரூ.27,312.26 கோடி முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உலகின் மிக உயரமான பாலமாக சீனாவின் ஹுவாஜியாங் கேன்யன் தேர்ச்சி!. 90க்கும் மேற்பட்ட கனரக லாரிகளை இயக்கி சோதனை!.

Wed Aug 27 , 2025
உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாகவும் சீனா உள்ளது, இப்போது அது மிக உயரமான பாலங்களைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. ஹுவாஜியாங் கேன்யன் பாலம் (Huajiang Canyon Bridge) உலகின் மிக உயரமான பாலமாக தேர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் தெற்காசிய நாடு உலகத் தரம் வாய்ந்த பொறியியலைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டியுள்ளது. இந்தப் பாலம் ஒரு ஆழமான பள்ளத்தாக்கின் குறுக்கே நீண்டுள்ளது மற்றும் 2,900 அடி நீளத்தைக் கொண்டுள்ளது. […]
world tallest bridge 11zon

You May Like