நல்லது பண்ண போய் இப்படி சிக்கிடீங்களே..! பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கியா பாஜக பிரமுகர் கைது..!

சென்னையில் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை பெண் ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சென்னையில் ஒரு அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கிட்டில் ஆபத்தாக நின்றதுடன், படிக்கட்டு அருகே உள்ள ஜன்னலில் ஏறி ஆபத்தாக பயணித்திருந்தனர், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் அந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் நடத்துனரை கண்டபடி வார்த்தைகளால் திட்டி விட்டு, ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை கடுமையாக தாக்கினார்.

இதில் அவர் மாணவர்களுக்கு நல்லது செய்தாலும், ஏன் அவர் காவல்துறையினரை அழைக்காமல் மாணவர்களை கண்டபடி தாக்கியுள்ளார், யார் இவருக்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்தது என்றும், இப்படி இவரே சட்டத்தை கையில் எடுத்தால் காவல் துறை எதற்கு என்று, இவர் மீது கண்டனங்கள் எழுந்தது. மேலும் இது தொடர்பாக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 5பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கிய நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கெரும்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனா நாச்சியார் வீட்டில் மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தியதை அடுத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய வாரண்ட் எங்கே என கேட்ட ரஞ்சனா நாச்சியாரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவாகிவிட்டதால் வாரண்ட் தேவையில்லை என கூறியபடி போலீஸார் கைது செய்தனர்.

Kathir

Next Post

குளிர்காலத்தில் தான் அதிக மாரடைப்புகள் ஏற்படுமாம்?… தப்பிக்க சில டிப்ஸ்!

Sat Nov 4 , 2023
குளிர் காலநிலை பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த பருவத்தில், கொலஸ்ட்ரால் கடினமாகி, நரம்புகளில் குவிந்துவிடும். இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குளிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நோயாளிகள் இந்த சீசனில் 7 விஷயங்களை மனதில் வைத்து உடல் நலத்தில் அக்கறை காட்டலாம். நீங்கள் பக்கவாதம் மற்றும் […]

You May Like