’சசிகலா காலில் ஏன் விழுந்தேன்’..? விடாமல் துரத்தும் கேள்விக்கு நச்சுனு பதில் கொடுத்த எடப்பாடி..!!

”நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசும் போது, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக கட்சி நிர்வாகிகள் மத்தியில் சசிகலா அறிமுகம் செய்தபோது எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தை எடுத்து காண்பித்து ‘பாதம்தாங்கிய பழனிசாமி’ என விமர்சித்தார்.

இந்நிலையில், இன்று மதுரையில் அதிமுக வேட்பாளர் சரவணனின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா காலில் விழுந்தது பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், நான் என்ன மூன்றாவது நபரின் காலிலா விழுந்தேன். வயதில் மூத்தவர்களிடம் ஆசி வாங்குவதில் எந்த தவறும் இல்லை என அதற்கான விளக்கத்தை அளித்தார் எடப்பாடி பழனிசாமி.

Read More : Gold | வரலாற்றில் புதிய உச்சம்..!! ரூ.51,000 தாண்டியது ஒரு சவரன் தங்கம்..!! சாமானிய மக்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

ரூ.921 கோடிக்கு சொத்து..!! தாயாரின் புடவை மட்டுமே ரூ.2 கோடி..!! சுயேட்சையின் வேட்புமனு தள்ளுபடி..!! என்ன காரணம்..?

Fri Mar 29 , 2024
மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ.921 கோடி சொத்து காட்டிய சுயேட்சை ஒருவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தோப்பூரைச் சேர்ந்த கன.வேழவேந்தன் (50). இவர், மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளில், கடைசி நபருக்கு முந்தைய நபராக மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, மனுதாக்கல் முடிய வேண்டிய கடைசி நேரத்தில் அவருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இவரும் கடைசி ஆளாக மனுதாக்கல் செய்துவிட்டு கிளம்பினார். இதனைத்தொடர்ந்து, […]

You May Like