உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, சவரன் ரூ.45,640 விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல் போர் காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தங்கம் நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45,600 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,705 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 6,175 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 49,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் இன்று 50 காசுகள் குறைந்து ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

மக்களே..!! அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!! கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க..!!

Fri Oct 27 , 2023
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (27-10-2023, 28-10-2023) இரு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் […]

You May Like