Gold Rate | வரலாறு காணாத உச்சம்..!! ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து 6,455 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி 5,815 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5,840 ஆக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 46,520க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மாதம் முழுவதும் அடுத்தடுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தது. புதிய உச்சமாக கடந்த மார்ச் 27ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்தது. இந்நிலையில், இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து, 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.680 உயர்ந்து புதிய உச்சமாக 51,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளி நேற்று 81 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 60 பைசா உயர்ந்து, 81 ரூபாய் 60 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : பூதாகரமாக வெடித்த கச்சத்தீவு விவகாரம்..!! இலங்கையிடம் சென்றது எப்படி..? யார் காரணம்..? மத்திய அமைச்சர் பரபரப்பு விளக்கம்..!!

Chella

Next Post

திரையுலகில் பரபரப்பு..!! ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா..!! காவல்துறை வழக்குப்பதிவு..!!

Mon Apr 1 , 2024
ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், அம்மா வேடத்திற்கும் பெயர் பெற்றவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது இவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த நடிகை சரண்யா, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஆபாசமாகத் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக […]

You May Like