பூதாகரமாக வெடித்த கச்சத்தீவு விவகாரம்..!! இலங்கையிடம் சென்றது எப்படி..? யார் காரணம்..? மத்திய அமைச்சர் பரபரப்பு விளக்கம்..!!

லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், இப்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளர்.

தமிழ்நாட்டிற்குச் சொந்தமாக இருந்த தீவு தான் கச்சத்தீவு. இது ராமநாதபுரம் மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்து வந்தது. மேலும், தமிழக மீனவர்கள் எப்போதும் சென்று மீன்பிடிக்கும் பாரம்பரிய பகுதியாகவும் கச்சத்தீவு இருந்து வந்தது. அங்கே உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயமும் கூட தமிழக மீனவர்களால் தான் கட்டப்பட்டது. இப்படி கச்சத்தீவு இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதை நிரூபிக்கப் பல ஆதாரங்கள் இருக்கிறது.

இருப்பினும், அனைத்தையும் தாண்டி கடந்த 1974இல் மத்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்தது. அப்போது முதலே கச்சத்தீவு விவகாரம் பேசுபொருளாக இருந்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறும் போதெல்லாம் கச்சத்தீவு விவகாரம் எழும். கச்சத்தீவு மட்டும் இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்து இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்பது அவர்கள் வாதம்.

இதற்கிடையே, லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் மீண்டும் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் கூட கருத்துகளைக் கூறியிருந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளே அதற்குக் காரணமாகும். சீனா பக்கம் இலங்கை சாய்ந்துவிடக் கூடாது உள்ளிட்ட காரணங்களால் இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கும் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு குறித்து கடந்த 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி 1974ஆம் ஆண்டு கச்சத்தீவின் மீதான இலங்கையின் உரிமையை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1974 ஜூன் 26-ம் தேதி கொழும்பிலும், ஜூன் 2இல் டெல்லியிலும் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆர்டிஐ குறித்த தகவல்களைப் பகிர்ந்த பிரதமர் மோடி, அவரும் காங்கிரஸைக் கடுமையாகச் சாடியிருந்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “கச்சத்தீவை இலங்கைக்கு அப்போதைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு தாரைவார்த்துக் கொடுத்தது பெரும் அதிர்ச்சி தருகிறது.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைப் பலவீனமாக்குவதே 75 ஆண்டுகளாகக் காங்கிரஸ் செய்த செயல். காங்கிரஸ் கட்சியை எப்போதுமே நம்பவே கூடாது என்பதைத்தான் கச்சத்தீவு விவகாரம் வெளிப்படுத்துகிறது. கச்சத்தீவு விவகாரம் அனைத்து இந்தியர்களையும் கோபமடையவே செய்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1976 ஒப்பந்தம் தடை செய்கிறது. இந்திய மீனவர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974இல் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் மீனவர்கள் உரிமை பாதுகாக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாகக் கச்சத்தீவு விவகாரம் குறித்துத் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக நான் 21 முறை முதல்வர் முக.ஸ்டாலினுக்குப் பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு பிரச்சனை எப்படி உருவானது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்” என்றார்.

Read More : BREAKING | நாடு முழுவதும் சுங்கக் கட்டண உயர்வு ரத்து..!! வாகன ஓட்டிகள் நிம்மதி..!! ஆனால், ஒரு ட்விஸ்ட்..!!

Chella

Next Post

அதிக வாக்குகள் பெற்று தரும் தலைவர்களுக்கு கார் பரிசு...! பாஜக வேட்பாளர் அதிரடி...!

Mon Apr 1 , 2024
அதிக வாக்குகள் பெற்று தரும் பாமக, பாஜக மாவட்ட செயலாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் பாஜக கிருஷ்ணகிரி எம்பி வேட்பாளர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த மக்களவைத் தொகுதியில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த 12 வேட்பாளர்கள், 15 சுயேச்சைகள் உட்பட 27 களத்தில் போட்டியிடுகின்றனர். இதனிடையே கட்சியினர் […]

You May Like