தேங்காய் விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சி செய்தி…! குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு…!

coconut farmers 2026

2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக, அனைத்து பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்று 2018-19 மத்திய பட்ஜெட்டில் அரசு அறிவித்தது.

2026 பருவத்திற்கு கொப்பரையின் நியாயமான சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.12,027 ஆகவும், பந்து கொப்பரைக்கு ரூ.12,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2026 பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, முந்தைய பருவத்தை விட, அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.445 மற்றும் பந்து கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த விலை அதிகரிப்பு, தேங்காய் விவசாயிகளுக்கு சிறந்த லாபகரமான வருமானத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தேங்காய் பொருட்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, கொப்பரை உற்பத்தியை விரிவுபடுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும்.

விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான மத்திய நோடல் ஏஜென்சிகளாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே 193 கிமீ தொலைவிற்கு இரட்டை ரயில் வழித்தடம்...! மத்திய அரசு ஒப்புதல்

Sat Dec 13 , 2025
விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே 193 கிமீ தொலைவிற்கு இரட்டை ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த விரிவான செயல்திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே ரயில்போக்குவரத்து மேலும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே தஞ்சாவூர் – […]
train

You May Like