ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: சேலம் மாவட்டத்தில், ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் M/s.சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (Kshema General Insurance Limited) நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
ரபி பருவத்தில் மக்காசோளம் II மற்றும் பருத்தி || பயிர்களுக்கு காப்பீடு செய்திட காலக்கெடு 31.10.2025 ஆகவும். நெல்-ll க்கு 15.11.2025, தட்டைப்பயறுக்கு 30.11.2025. சோளம் 16.12.2025 நிலக்கடலைக்கு 30.12.2025, நெல்-III 31.1.2026 எனவும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு பிரிமீயத் தொகையாக ஒரு ஏக்கர் நெல்-|| க்கு ரூ.568/-, மக்காசோளம்-|| ரூ.482/-, பருத்தி-|| ரூ.680/-, நிலக்கடலைக்கு ரூ.326/-, சோளம் ரூ.150/-. தட்டைப்பயறு ரூ.252/- நெல்-III ரூ.568/-செலுத்தி உரிய காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட பிர்க்காவில் உள்ள விவசாயிகள், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல், பயிர் சாகுபடி அடங்கல், விண்ணப்ப படிவம் மற்றும் முன்மொழிவுப் படிவம் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடு ஏற்படும் காலத்தில் உரிய காப்பீட்டுத் தொகை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



