தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 861 விவசாயிகளிடமிருந்து 31473.988 மெ.டன்கள் கரும்பு விநியோகம் செய்யப்பட்டதற்கான தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை ரூ.1.09 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவுவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 861 விவசாயிகளிடமிருந்து 31473.988 மெ.டன்கள் கரும்பு சப்ளை செய்யப்பட்டது. ஆலை அரவைக்கு கரும்பு வழங்கிய விசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் 31473.988 மெட்ரிக் டன்களுக்கு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசாணை படி ரூ.1.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவுவைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025-26 ம் நடவுப்பருவத்தில் புதிய நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலையின் தமிழக அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அகலபாருடன் கூடிய பருசீவல் நாற்று நடவிற்கு ஏக்கருக்கு ரூ.7450 மானியமாகவும் மற்றும் அகலபாருடன் கூடிய ஒரு பருவிதைக்கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3200 மானியமாக வழங்கப்படவுள்ளது எனவே அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து ஆலைக்கு பதிவுசெய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.