டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! ரூ.2,000 ஊதிய உயர்வு… இவர்களுக்கு மட்டும் கிடையாது..!

tasmac 2025

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. மேலும், மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: இன்று உலக மக்கள் தொகை தினம்!. 2030க்குள் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும்!. இந்த மாநிலம்தான் முதலிடம்!.

Vignesh

Next Post

உஷார்...! வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் நபர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்...!

Tue Jul 15 , 2025
வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது. வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் https://emigrate.gov.in இணையதளத்தில் பதிவு […]
Tn Govt 2025

You May Like