குட்நியூஸ்!. கடனின் அசல் தொகையை முன்கூட்டியே செலுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!. வங்கிகளுக்கு RBI அதிரடி உத்தரவு!

Pre payment charges RBI 11zon

அதிவட்டி விகிதத்தில் (floating interest rate) வழங்கப்படும் கடன்களை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற விரும்பும் தனிநபர் கடனாளர்களிடமிருந்து, வங்கிகள் முன்கட்டணத் தொகை அல்லது pre-closure charges எதையும் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிவட்டி விகித கடன்களில், முன்பணம் செலுத்தும் கடனாளர்களிடமிருந்து எந்தவிதமான அபராத கட்டணமும் வங்கிகள் வசூலிக்கக் கூடாது,” என தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும், அந்த நாளில் அல்லது அதன் பின் அங்கீகரிக்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் கடன்கள் மற்றும் கிரெடிட் வசதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது, குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு (MSEs) எளிதான மற்றும் மலிவு விலையில் நிதி அணுகலை உறுதி செய்வதையும், தனிப்பட்ட கடன் வாங்குபவர்களை நியாயமற்ற நடைமுறைகளிலிருந்து பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

MSE-களுக்கும் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கும் சமமான விதிகள்: வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் குறு மற்றும் சிறு தொழில்கள் (MSEs) எடுத்த அதிவட்டி விகித கடன்களுக்கு முன் கட்டணங்கள் (pre-payment charges) வசூலிக்கக் கூடாது. தொழில்முறை நோக்கங்களுக்காக அல்லாத கடன்களுக்கு முன் கட்டணங்கள் வசூலிக்க முடியாது, இது co-borrowers உடைய கடன்களுக்கும் பொருந்தும்.

பொதுத் துறை வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். கடனின் அசல் நிலுவைத் தொகை முழுதுமாக திருப்பி செலுத்தப்பட்டாலும், கட்டணம் வசூலிக்கக் கூடாது. திருப்பிச் செலுத்துவதற்கான தொகைக்கு ஆதாரம் ஏதும் தேவையில்லை. கடன் பெற்ற நாளில் இருந்து லாக் – இன் பீரியட் எனப்படும் எந்த குறிப்பிட்ட கால கட்டுப்பாடும் இல்லாமல், இந்த சலுகையை வாடிக்கையாளர் பெறலாம்

சிறப்பு வட்டியில் வழங்கப்பட்ட கடன், நிலையான வட்டி மட்டும் அல்லாத பிக்சட் மற்றும் புளோட்டிங் இணைந்த வட்டியில் பெறப்பட்ட கடனுக்கும் இது பொருந்தும். வாடிக்கையாளர் அல்லாமல், வங்கியே பகுதியளவு கடனை அடைக்க அழைப்பு விடுக்கும் சூழலிலும் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது.  கடனில் இணை விண்ணப்பதாரர் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த விதி பொருந்தும். இது லட்சக்கணக்கான தனிநபர்களுக்கும், சிறு தொழில்முனைவோர்களுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும். ஒருவேளை, ஒரு MSE-யின் மொத்தக் கடன் ரூ. 7.50 கோடிக்கு மேல் இருந்தால், கூடுதல் தொகைக்கு இந்த விதி பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்.பி.ஐ.,யின் அறிவிப்புக்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Readmore: Tn Govt: 58 வயது கடந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.6,000 ஓய்வூதியம்…! எப்படி பெறுவது…?

KOKILA

Next Post

சரத்குமாரின் 3BHK மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. நீங்க எந்த படத்துக்கு போறீங்க..?

Fri Jul 4 , 2025
வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். கடந்த வாரம் வெளியான படங்கள் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகும் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா என்ற கவலையில் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் 3 முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. 3BHK: தமிழ் சினிமா அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற காலம் மறைந்து போய், தற்போது […]
tamil movies 1

You May Like