Flash : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்..! இன்று தங்கம் விலை தடாலடி சரிவு..! எவ்வளவு தெரியுமா..?

gold coins gold jewellery floor background 181203 24090 1

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது..

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.130 குறைந்து ரூ.14,070 -க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை ஒரே நாளில் தாறுமாறாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

English Summary

In Chennai today, the price of ornamental gold has decreased by ₹1,040 per sovereign, and it is being sold at ₹1,12,560.

RUPA

Next Post

இந்தியாவுக்கு 'எல் நினோ' அச்சுறுத்தல்..! இந்த மாநிலங்களில் மழைப்பொழிவு வெகுவாக குறையும்..!

Mon Jun 8 , 2026
இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் விவசாயத்தின் முதுகெலும்பாகத் திகழும் தென்மேற்குப் பருவமழையை ‘எல் நினோ’ (El Niño) பாதிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடலில் பதிவாகியுள்ள சாதனை அளவிலான வெப்பநிலையால், இந்த ஆண்டு நாட்டில் இயல்பை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று சமீபத்திய தகவல்கள் எச்சரிக்கின்றன. உலகளாவிய காலநிலை மாதிரிகள் மற்றும் ஜெர்மன் ஆராய்ச்சி மையத்தின் அவதானிப்புகளின்படி, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் […]
El Nino Effect 2026

You May Like