Good News | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!! குஷியில் மாணவர்கள்..!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று (மார்ச் 14) விழுப்புரம் மாவட்டத்திற்கு அம்மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடக்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான விழா மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் தேதி மயானக்கொள்ளை விழாவும், மார்ச் 12ஆம் தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள். இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 23ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்று அறிவித்துள்ளார்.

Read More : Gas Cylinder | இனி வெறும் ரூ.700-க்கு கேஸ் சிலிண்டர் வாங்கலாம்..!! இல்லத்தரசிகள் மகிழ்சி..!!

Chella

Next Post

JOB: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!… IIT மெட்ராஸில் வேலைவாய்ப்பு!… சம்பளம் எவ்வளவு தெரியுமா?… முழுவிவரம் இதோ!

Thu Mar 14 , 2024
JOB: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பொது தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தியாவின் எமினன்ஸ் 8 பொது நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியன் […]

You May Like