ஊழியர்களை நீக்கிய கூகுள்!… இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவியதால் அதிரடி நடவடிக்கை!

Google: கூகுள் நிறுவனம் மற்றும் இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

ப்ராஜக்ட் நிம்பஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து 28 ஊழியர்கள், நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூகுள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து கூகுள் நிறுவனம் போராட்டம் நடத்திய 28 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்பு தலைவர் க்றிஸ் ராக்கோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இது போன்ற நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை என்றும், இவற்றை கூகுள் பொறுத்துக் கொள்ளாது என்றும் எச்சரித்துள்ளார். மேலும், இது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் இவை சக பணியாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் ராக்கோ தெரிவித்துள்ளார்.

Readmore: Raid: நள்ளிரவில் அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை…! ரூ. 2.85 கோடி பறிமுதல்…!

Kokila

Next Post

பிரபல Everest நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி..!! அதிரடியாக தடை விதிக்க அரசு..!!

Fri Apr 19 , 2024
இந்திய தயாரிப்பான எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாகக் கூறி அதற்கு தடை விதித்து, திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீர், கோலா பானங்கள் முதல் பல்வேறு ரகத்திலான உணவுப்பொருட்கள் வரை பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாக புகார்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்திய தயாரிப்பான பிரபல எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகம் இருப்பதாகக் கூறி, அதற்கு […]

You May Like