Raid: நள்ளிரவில் அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை…! ரூ. 2.85 கோடி பறிமுதல்…!

சென்னை பல்லாவரத்தில் அதிமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிஎல்ஆர் புளூ மெட்டல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் அமைந்துள்ள நிறுவனம், கிரஷர் இயந்திரத்தில் பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் லிங்கேஸ்வரன், பழைய பல்லாவரத்தில் வசிக்கிறார். இந்த சோதனையை தொடர்ந்து லிங்கேஸ்வரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு 12.30 மணி முதல் 3.30 மணி வரை சோதனை செய்து ரூ. 1.85 கோடி ரொக்கமாக இருந்தது.

நிறுவனம் மற்றும் லிங்கேஸ்வரன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2.85 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரின் நிறுவனம் மற்றும் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நாள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

ஊழியர்களை நீக்கிய கூகுள்!… இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவியதால் அதிரடி நடவடிக்கை!

Fri Apr 19 , 2024
Google: கூகுள் நிறுவனம் மற்றும் இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. ப்ராஜக்ட் நிம்பஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து 28 ஊழியர்கள், நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூகுள் […]

You May Like